தக்காளி சாதப்பொடி தயார் செய்து விற்பனை செய்யும் தொழில். இந்த தொழிலை ஆண், பெண் இருவருமே செய்யலாம் நல்ல வருமானம் கிடைக்கும். இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம், எங்கு ஆரம்பிக்கலாம், என்னென்ன மூலப்பொருட்கள் தேவைப்படும், எவ்வளவு முதலீடு தேவைப்படும் போன்ற விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

இடம்:

இந்த தக்காளி பொடி தயாரிப்பு தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்காக தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களிடம் தனியாக இடம் இருக்கிறது என்றால் அங்கு தக்காளி பொடி தயாரிக்கலாம்.

மூலப்பொருள்:

தக்காளி, பேக்கிங் கவர், பேக்கிங் மிசின் இந்த மூன்று பொருட்களும் தேவைப்படும்.

இயந்திரம்:

இந்த தொழில் தொடங்க ஆரம்பத்தில் மிக்சியை பயன்படுத்தி கொள்ளுங்கள், தொழில் நன்கு சூடுபிடித்து பிறகு ஒரு Pulverizer machine- வாங்கிக்கொள்ளவும். இதனுடைய ஆரம்ப விலை 18,000/- ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. பேக்கிங் மிசின் 1300 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.

முதலீடு:

இந்த தொழிலை தொடங்க குறைந்தபட்சம் 5000 ரூபாய் இருந்தால் போதும். வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானம் பெறமுடியும்.

தயாரிப்பு:

தக்காளியை மொத்தமாக வாங்கி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக காயவைத்து தண்ணீர் நன்கு வற்றி, வற்றல் போல் தாக்களில் நன்கு காய்ந்து வந்ததும். அதனை மிக்சியில் அரைத்து பவுடர் போல் ஆக்கிக்கொள்ளவும். பிறகு அதனை 50 கிராம், 100 கிராம், 250 கிராம் என்று பேக்கிங் செய்து விற்பனை செய்யவும்.

சந்தை வாய்ப்பு:

மளிகை கடை, டிபாட்மென்ட் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். இது தவறி நீங்கள் ஆன்லைனில் விற்பனை செய்யலாம். மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம்.

தேவைப்படும் சான்றிதழ்:

  • எந்த ஒரு உணவு சார்ந்த பொருட்களை விற்பனை செய்தாலும் அதற்கு நீங்கள் FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆன்லைனில் விற்பனை செய்வதாக இருந்தால்.. GST Registration செய்திருக்க வேண்டும்.
  • வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக இருந்தால் IMPORTER EXPORTER CODE (ஏற்றுமதி உரிமம் )பெற வேண்டும்.
  • ஏதேனும் சான்று தேவை இருப்பின்   WWW.indiaesevakendra.in  தொடர்பு கொள்ளவும்.

    வருமானம்:

    ஒரு கிலோ தக்காளி பவுடர் சந்தையில் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. ஆக இந்த ஒரு கிலோ தக்காளியில் 100 கிராம் தக்காளி பவுடர் தயார் செய்யலாம். ஒரு கிலோ தக்காளியின் விலை 20 ரூபாய் ஆகும். ஒரு கிலோ தக்காளி பவுடர் செய்ய நமக்கு 10 கிலோ தக்காளி தேவைப்படும். அதற்கான செலவு 200 ரூபாய். பேக்கிங் செலவு உட்பட அனைத்தும் சேர்த்து உற்பத்தி செலவு 300 ரூபாய் போக நமக்கு ஒருகிலோ தக்காளி பவுடரில் இருந்து 350 ரூபாய் லாபம் கிடைக்கும்.

    ஒரு நாளுக்கு 10 கிலோ தக்காளி பவுடர் விற்பனை செய்தோம் என்றாலும் கூட நமக்கு 3500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். மாதம் 1 லட்சத்திற்கு மேல் லாபம் பெற முடியும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    error: Content is protected !!
    Enable Notifications OK No thanks
    On which category would you like to receive?