படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இதனை மேம்படுத்தும்வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, “அனைவருக்கும் இ-சேவை மையம்” திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இசேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இ-சேவை மையம்” திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும், இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும். ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://www.tnesevai.tn.gov.in/ (or) https://www.tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும். விண்ணப்பங்களை 15.03.2023 நேரம்: 11.30 முதல் 14.04.2023 நேரம்: 20.00 வரை மட்டுமே பதிவு செய்ய இயலும், கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3000/- மற்றும் நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6000/- ஆகும். இவ்விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரர், பயனர்பெயர் (Usemame) மற்றும் கடவுச்சொல் (Password) ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கள்கள், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் , மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்த மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Enable Notifications OK No thanks
On which category would you like to receive?