திருமணம் உள்ளிட்ட வைபவங்களுக்குச் சமைத்து பரிமாறும் தொழிலான இந்தத் தொழில் தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

ஒவ்வொரு நேரத்திற்கும் சாப்பிடக்கூடிய ஆட்களையும் இன்னிக்கு முன்னமே ஓரளவு கணித்து வைத்து அதற்கேற்ற மூலப்பொருட்கள் மட்டும் வாங்கி சமைப்பதால் பெரும்பாலான பொருள் நஷ்டம் பண நஷ்டமும் தவிர்க்கப்படும்.

ஏதேனும் ஒரு சில நாட்கள் மட்டுமே கேட்டரிங் சர்வீஸ் தொழில் இருக்கும்.ஒரு சில நாட்கள் மட்டுமே உங்களுக்கு இருக்கும் அனைத்து விதமான பாத்திரங்களும் சொந்தமாக வாங்கி வைக்கத் தேவையில்லை.ஆர்டருக்கு தகுந்தவாறு பாத்திரங்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கேட்டரிங் சர்வீஸ் முடிந்தவுடன் திருப்பி அளிப்பதன் மூலமாக உங்களது பெரும் முதலீடு தவிர்க்கப்படுகிறது. 

அருமையாகச் சமைக்கும் சமையல்காரர்களை உங்கள் தலைமையில் ஒருங்கிணைத்து இயக்கினாலும் நல்ல லாபம் கிடைக்கும்.கேட்டரிங் சர்வீஸ் ஆர்டர்கள் இருந்தால் மட்டும் அவர்களை வரவைத்து அதற்கேற்ற ஊதியம் மற்றும் கொடுப்பதன் காரணமாக பெரும் லாபம் உங்கள் கையில் சேரும்.

இந்தியாவில் கேட்டரிங் தொழில் வளர்ச்சி:

இந்தியாவைப் பொருத்தவரை இந்த கேட்டரிங் தொழில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டு தோறும் ஆறு சதவீதத்திற்கும் மேலாக வணிக வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இந்த கேட்டரிங் சம்பந்தமான தொழில்களில் இந்தியாவில் புரள்கிறது.

இத்தகைய வணிக வளர்ச்சி கொண்ட கேட்டரிங் சர்வீஸ் உங்களது முதன்மையான தொழிலாக எடுத்து நடத்த எந்த ஒரு ஐயப்பாடும் தேவையில்லை.

போக்குவரத்து வசதி உள்ள இடத்தில் அலுவலகம் அமைக்க வேண்டும்:

உணவகம் திறப்பதை போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் இடம் தேவைப் படாவிட்டாலும் உங்களது பாத்திரம் மற்றும் மற்ற பொருட்களை ஏற்றி இறக்குவதற்கு தகுந்த போக்குவரத்து வசதி உள்ள இடமாகவும் வாடிக்கையாளர் எளிதாக உங்களை அணுகக்கூடிய இடமாகவும் இருத்தல் அவசியம். 

மேலும் எரி பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் வெவ்வேறு இடங்களுக்கு எரிபொருட்களை எடுத்து செல்லும் போது அதற்குரிய சான்றிதழ்களை வாகனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சமையல் தொழில் என்பது எப்பொழுதும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருந்து செய்யக்கூடிய தொழில் ஆகும். அகவே உங்களிடம் வேலை செய்யும் சமையல் உதவியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆபத்துக் காலத்தில் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றிய அறிவுறுத்தல் செய்ய வேண்டும். 

மார்க்கெட்டிங் உத்திகளை கையாள வேண்டும்:

இன்றைய இளைய தலைமுறைகள் சிறந்த மார்க்கெட்டிங் கையாண்டு பத்து ரூபாய் பெருமானமுள்ள பொருளை நூறு ரூபாய்க்கு விற்று அதிகப்படியான லாபங்களை சம்பாதிக்க கற்றுக் கொண்டு விட்டனர். ஆகவே அவர்களுக்கு இணையாக நீங்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு சிறப்புற வேண்டும் என்றால் அத்தகைய மார்க்கெட்டிங் உத்திகளை நீங்களும் பயன்படுத்தி செய்தால் மட்டுமே மிகச் சிறந்த வெற்றியை அடைய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Enable Notifications OK No thanks
On which category would you like to receive?